
கோலாலம்பூர், அக்டோபர் 9 –
மலேசியாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி, வலைதளவாசிகளின் கடும் விவாதத்தையும் கோபத்தையும் எழுப்பியுள்ளது.
வைரலாகிய டாஷ்கேம் வீடியோவில், ஒரு பெண் தனது காரில் எரிபொருள் நிரப்பிய பின்னரும் வாகனத்தை பம்ப் முன்பாகவே நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.
சில நேரம் கழித்து அவர் மீண்டும் திரும்பி வருவதால் கார் நகர்த்தப்படும் என நினைத்தவர்கள் நிம்மதியடைந்தனர், ஆனால் அந்தப் பெண் மீண்டும் வாகனத்தை விட்டு எங்கோ சென்றுவிட்டார்.
அதன்பின், அந்தக் காரின் உரிமையாளர் என நம்பப்படும் அடைவர் ஒருவர் வாகனத்துக்கும் கவுன்டருக்கும் இடையே மெதுவாகச் சென்று வந்து கொண்டிருந்தார்.
டாஷ்கேம் காட்சியில், அவர் சோம்பேறித்தனமாக குப்பையை அகற்றிக் கொண்டும், பின்னால் காத்திருக்கும் ஓட்டுநர்களை எள்ளலான பார்வையுடன் பார்த்துக் கொண்டும் இருப்பது தெளிவாகக் காணப்படுகிறது.
சுமார் ஐந்து நிமிடங்கள் காத்திருந்தும், அந்தக் கார் நகர்த்தப்படாததால் இறுதியில் அந்த வாகனத்தின் பின்னாலிருந்த ஓட்டுநர் அதிருப்தியுடன் அங்கிருந்து சென்று விட்டார்.
இணையத்தில் விரைவாக பரவிய இந்தக் காணொளியின் கருத்துரைத்த ஒருவர், அந்த ஆண் குறைந்தபட்சம் கையை அசைத்து ‘சிறிது நேரம் காத்திருங்கள்’ என்று சொல்லியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அந்நபர் மற்றவவர்களின் நிலையை அறிந்து அறியாதது போல நடந்து கொண்டது உண்மையிலேயே கோபத்தை உண்டாக்குகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சம்பவம், விதிகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், பொதுமனித அறிவும் பிறருக்கான மரியாதையும் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.