Latestமலேசியா

பெராவில் அண்ணன் வீட்டுக்குச் செல்லும் வழியில் சாலை விபத்து, தலைமையாசிரியர் பலி

குவாந்தான், ஜூலை-30- குவாந்தான், Bera-வில் அண்ணன் வீட்டுக்குச் செல்லும் வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தடம்புரண்டு தீப்பிடித்ததில், தலைமையாசிரியர் உயிரிழந்தார்.

Guai தேசியப் பள்ளி அருகே நேற்று மாலை 6.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது. தெமர்லோவைச் சேர்ந்த 59 வயது Mohd Sabri Bakar, சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவர், ஜெராண்டூட்டில் (Jerantut) உள்ள டுரியான் ஹீஜாவ் (Durian Hijau) தேசியப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆவார். தீயில் அவரின் கார் 80 விழுக்காடு எரிந்துபோனது.

இவ்வேளையில் Bera-வில் ஏறக்குறைய அதே நேரத்தில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவர், மரம் மேலே விழுந்து பலியானார்.

அவர் 65 வயது Kamar Seman என அடையாளம் கூறப்பட்டது. இந்த இருவரின் சடலங்களும் சவப்பரிசோதனைக்காக Bera மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!