ஷா ஆலம், செப்டம்பர் 3 – சிலாங்கூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா பாதுகாப்புத் துறை மற்றும் ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் இணைந்து பிற்பகல் 5 மணியளவில் நடத்திய சோதனையின் போது, முதலை ஒன்று 5 நிமிடங்களுக்குத் தென்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, விரைவில் அந்த முதலையைப் பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிலாங்கூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா பாதுகாப்பு துறை இயக்குநர் வான் முகமட் அடிப் வான் முகமட் யூசோப் (Wan Mohd Adib Mohd Yusof) தெரிவித்தார்.
எனினும், ஏரி பகுதியில் பொறிகளை வைப்பதற்கு முன்பு, அதனை கண்காணித்து, அடிக்கடி தோன்றும் பகுதிகள், இரவில் ஒளிந்து கொள்ளும் இடங்கள் போன்றவற்றை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
இந்நிலையில், முதலை பிடிக்கப்பட்ட பின்னர் Paya Indah Wetlandல் உள்ள முதலை சரணாலயத்திற்கு மாற்றப்படும் என அவர் தெரிவித்தார்.