
கோலாலம்பூர், நவ 25 – டிக்டோக்கில் மாட்சியை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் குரலைப் பின்பற்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய காணொளிகளை அரச பத்திரிகை அலுவலகம் கண்டறிந்துள்ளது.
சுல்தான் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் உள்ள ஒரு பதிவின்படி, இந்த கணக்குகள் நோன்பு மாதத்தில் பேரரசர் பொதுமக்களுக்கு நிதி உதவி வழங்குவதாகக் கூறும் உள்ளடக்கத்தை பரப்பியதாக அரச பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதோடு , சமூக ஊடக தளங்களில் ஏமாற்றும் நோக்கங்களுக்காக மோசடி செய்பவர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்த போலி கணக்குகளால் எளிதில் பாதிக்கப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றவர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதும், ஒருவரின் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் கிரிமினல் குற்றங்கள் என்பதை அரச பத்திரிகை அலுவலகம் வலியுறுத்த விரும்புகிறது
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.டிக்டோக்கில் சோதனை செய்தபோது, படங்களைப் பயன்படுத்தி இரண்டு வீடியோக்கள் மற்றும் சுல்தான் இப்ராஹிமின் குரலைபோல் ஒரு குரல் இருப்பதும் கண்டறியப்பட்டது.



