
பொந்தியான், ஆகஸ்ட்-21 – ஜோகூர் பொந்தியானில் வணிகத் தளமொன்றில் மலேசியக் கொடி தலைக்கீழாகப் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பில் அனைவரும் அமைதிக் காக்குமாறு, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ Ahmad Maslan கேட்டுக் கொண்டுள்ளார்.
பல் கிளினிக் ஒன்றில் மாட்டப்பட்டிருந்த Jalur Gamilang சரிசெய்யப்பப்பட்டுள்ளது.
அச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டு, பல் கிளினிக் உரிமையாளரும் கொடியைத் தவறாக மாட்டிய பணியாளர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதிகாரத் தரப்பும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
இது இன விவகாரம் அல்ல; மாறாக, நாட்டுப் பற்று மற்றும் விழிப்புணர்வை உட்படுத்தியதாகும் என்றார் அவர்.
முன்னதாக அச்சம்பவம் வைரலானதை அடுத்து, ஜோகூர் கொடிக்கு அருகில் தலைக்கீழாக மாட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை உடனடியாக சரிசெய்யுமாறு, பொந்தியான் மாவட்ட மன்றம் அந்தத் தனியார் கிளினிக்கை உத்தரவிட்டது.
இதையடுத்து 3 பெண்கள் உட்பட நால்வர் விசாரணைக்காக மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.