
லண்டன் – ஆகஸ்ட் 8 – சிறைச்சாலையை மையமாகக் கொண்டியங்கிய போதைப்பொருள் வியாபார வலையத்தை முறியடிக்க, கிளி ஒன்று “25க்கு இரண்டு” என கூறும் வீடியோ போலீஸ் தரப்பிற்கு முக்கிய ஆதாரமாக இருந்துள்ளது.
2023 பிப்ரவரி முதல் 2024 ஜூலை வரை இங்கிலாந்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 15 பேருக்கு எதிராக போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இக்கூட்டத்தின் தலைவன் சிறையிலிருந்தபோதே இந்த வலையத்தை இயக்கியுள்ளான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது
அவனது அறையில் கைபேசிகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதுடன், அவனது நண்பர்கள் வீடுகளில் ஹெராயின், கிராக் கோகைன், கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருள்கள் சிக்கியுள்ளன.
இந்நிலையில் அவனது தொலைபேசியிலிருந்து கிளி ஒன்று “25க்கு இரண்டு” என சொல்லும் வீடியோ கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது போதைப்பொருள் ஒப்பந்தத்தின் குறியீடு என போலீசாரால் உறுதி செய்யப்பட்டது.
அக்குற்றவாளிக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவனது கும்பலுக்கும் தக்க தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.