
தெஹ்ரான், ஏப்-1- அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஈரான் தயாராக உள்ளது, ஆனால் மீண்டும் நெருக்கடி ஏற்படக்கூடாது என்ற உறுதி அளிக்கப்பட வேண்டுமென ஈரான் அதிபர் மாசுட் பெஷஸ்கியான் ( Masoud Pezeskian ) வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு ஒரு நாளுக்குப் பிறகு ஈராக்கின் புரட்சி காவல் படை (IRGC ) அதிகாரி தெரிவித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஈரான் அதிபரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த நெருக்கடியை அவசியம் தீர்ப்பதற்கான விருப்பம் இருக்கிறது , ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பு நடத்தப்படாது என்ற வாக்குறுதி அளிக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய மன்ற தலைவரிடம் நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடலில் Masoud Pezeshkian தெரிவித்திருக்கிறார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கடந்த வாரம் அமெரிக்கா முன்வைத்த 15 அம்சத் திட்டத்திற்குப் பதிலடியாக, இஸ்ரேலும் அமெரிக்காவும் மீண்டும் தாக்குதல் நடத்தாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு வழிமுறையை டெஹ்ரான் முன்னதாகக் கோரியிருந்தது.
மேலும் அதிகமான தலைவர்கள் கொல்லப்பட்டால் கூகுள், மெட்டா மற்றும் ஆப்பிள் போன்ற அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கப்படும் என்று முன்னதாக ஐ.ஆர்.ஜி.சி (IRGC ) எச்சரித்திருந்தது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைச் சந்தித்திருந்த அமெரிக்கப் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத், ( Pete Hegseth) இந்த மோதலில் வரவிருக்கும் நாட்கள் தீர்க்கமானதாக இருக்கும் என்று கூறினார்.
ஈரானுக்கு அது தெரியும், மேலும் இராணுவ ரீதியாக அவர்களால் கிட்டத்தட்ட எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.



