
கிள்ளான், ஆகஸ்ட் 1 – போர்ட் கிள்ளான், பங்சாபுரி ஸ்ரீ பெரந்தாவ் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 8 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்நிலையில் மாடியிலிருந்து விழுந்த சிறுவன் கீழே துணி ஒன்று மூடி இறந்து கிடைக்கும் காணொளி முகநூலில் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறிவதற்கு தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையக (IPD) அதிகாரிகள் மேல் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.