
போர்ட் கிள்ளான், மார்ச் 7 – போர்ட் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் திருக்குறள் மன்றம் (Thirukkural Mandram), வாட்சன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் (Watson School Former Students Association) , Times Lapse Adventures ஆகியவை ஏற்பாட்டில் மார்ச் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.
தானத்திலேயே சிறந்த தானமாக இரத்த தானம் விளங்குவதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேல் விவரங்களுக்கு 016-321 5567 எண்களில் ஹேமதரனுடன் (HemaTharan) தொடர்புகொள்ளலாம்.