கோலாலம்பூர், டிச 4 – இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு பாலியல் சேவை வழங்க முன்வந்த தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இரு பாலியல் தொழிலாளர்களுக்கு தனி நீதிமன்றங்களில் அபராதம் விதிக்கப்பட்டது.
36 வயது தாய்லாந்து பெண்ணுக்கு 1,800 ரிங்கிட் அபராதமும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு 1,500 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டன. அவர்கள் இருவரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் ஜாலான் புடு, டாங் வாங்கியில் உள்ள தனி ஹோட்டல் அறைகளில் இரண்டு பெண்களும் போலீஸ் அதிகாரிகளுக்கு பாலியல் சேவைகளை வழங்கியதாக குற்றவியல் சட்டத்தின் 372 ஆவது பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.