
வாந்தான், ஜூலை-7 – மக்களுக்கான உதவித் திட்டம் என்ற பெயரில் பஹாங் சுல்தான் அல் சுல்தான் அப்துல்லாவின் உருவத்தில் AI வீடியோ ஒன்று பரவியுள்ளது.
அது மக்களை ஏமாற்றும் மோசடி வேலை என்பதால் கவனமாக இருக்குமாறு பஹாங் அரண்மனை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிக் டோக்கில் வைரலாகி வரும் அந்த போலி வீடியோவைப் பகிர வேண்டாம் என்றும், அதில் ஏதாவது link இணைப்பு இருந்தால் அதைத் தட்ட வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற சந்தேகத்திற்குரிய உள்ளடக்கங்களைப் பெற்றால் அதிகாரத் தரப்பிடம் புகாரளிக்குமாறும் அரண்மனை கேட்டுக் கொண்டது.
பஹாங் சுல்தான் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் எதனையும் வைத்திருக்கவில்லை.
அவரின் உரைகளோ, அறிக்கைகளோ எதுவாக இருந்தாலும் 725,000 பின்தொடர்பாளர்களைள் கொண்ட Kesultanan Pahang என்ற அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.