Latestமலேசியா

மத்திய ஜகார்த்தாவில் பெரிய அளவில் தீ விபத்து -330 குடும்பங்கள் வீடுகளை இழந்தனர்

ஜகர்த்தா, ஜூன்-2-மத்திய ஜகார்த்தாவின் கெமாயோரன் (Kemayoran), னில்
மக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் மூன்று குடியிருப்பாளர்கள் காயமடைந்ததோடு , நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

பல மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு நடவடிக்கைக்குப் பிறது திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விடியற்காலை மணி 4.15 அளவில் தீயணைக்கும் நடவடிக்கை முழுமையாக முடிவுக்கு வந்தது.

இந்த தீ விபத்தில் 330 குடும்பங்களைச் சேர்ந்த, அதாவது சுமார் 620 பேர், வீடுகளை இழந்தனர்.

இரவு மணி 8.55க்கு தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ஜகார்த்தா தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!