Latestமலேசியா

மனைவி உஷாவுடன் விவாகரத்தா? அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மௌனம் கலைந்தார்

வாஷிங்டன், அக்டோபர்-24,

தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா குறித்து பரவி வந்த விவாகரத்து வதந்திகளுக்கு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பதிலளித்துள்ளார்.

வெள்ளை மாளிகை முன்னாள் பேச்சாளர் ஜென் சாக்கி (Jen Psaki), தனது “I’ve Had It” என்ற போட்காஸ்டில் உஷா வான்ஸைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த போது, ஜேடி வான்ஸ் அதற்கு எதிர்வினையாற்றினார்.

திருமண பந்தத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய சூழலில் உஷா இருப்பது போலவும், கண் சிமிட்டினாலே அவரைக் காப்பாற்றத் துணிவோம் என்ற ரீதியில் சாக்கி ‘நகைச்சுவை’யாகக் கூறினார்.

இதற்கு பதிலளித்த, ஜே.டி. வான்ஸ் சாக்கியின் கூற்று “அவமானகரமானது” என்றார்.

மேலும் “இரண்டாவது பெண்மணியால் அவருக்காக அவரே பேச முடியும் — நான் ஓர் அற்புதமான மனைவியைப் பெற்றவன்” என்று தெரிவித்தார்.

வான்ஸோ அல்லது உஷாவோ இருவரும் இதுவரை விவாகரத்தை உறுதிச் செய்யும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

என்றாலும் எங்கிருந்து ‘புரளி’ கிளம்பியது எனத் தெரியவில்லை.

உண்மையோ பொய்யோ, அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகங்கள் தீனியாக்கிக் கொள்ளும் கலாச்சாரம் தொடருவதையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துவதாக அரசியல் பார்வையளர்கள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!