Latestமலேசியா

மரணத்திற்குப் பின் தீர்ப்பு; ஊழல் வழக்கில் புங் மொக்தார் விடுதலை, மனைவி மீதான வழக்குத் தொடருகிறது

கோலாலம்பூர், ஜனவரி-16 – சபா, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின், 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்த சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அத்தீர்ப்பை வழங்கியது.

FELCRA-வின் நிர்வாகமற்ற தலைவராக இருந்த புங் மொக்தார், Public Mutual அறங்காப்பு நிதியில் RM150 மில்லியனை முதலீடு செய்ய அந்நிறுவனம் ஒப்புதல் அளித்தது தொடர்பில் 3 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.

இந்நிலையில் அவர் மரணமடைந்து விட்டதால் வழக்கைத் தொடர விரும்பவில்லை என, அரசு தரப்பு நிதிமன்றத்தில் தெரிவித்ததை ஏற்றுக் கொண்டு நீதிபதி அதனை அறிவித்தார்.

ஆனால் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ Zizie Izette Abdul Samad
மீது வழக்குத் தொடர்கிறது.

புங் மொக்தாருக்கு உடந்தையாக இருந்ததாக Zizie மீது கொண்டு வரப்பட்ட 3 குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுமாறு அவரது வழக்கறிஞர் முன்வைத்த விண்ணப்பதை அரசு தரப்பு நிராகரித்தது.

இதையடுத்து, தனியாளாக Zizie இனி வழக்கை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!