Latestமலேசியா

மலாக்காவில் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து உயிருக்குப் போராடும் மருத்துவப் பட்டப் படிப்பு மாணவர்

மலாக்கா, ஆகஸ்ட்-27 – மலாக்காவில் அடுக்குமாடி கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 24 வயது மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் உயிருக்குப் போராடுகிறார்.

மூளை அதிர்வால் ஏற்பட்ட கடுமையான காயம் மற்றும் மண்டையோட்டுக்குள் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்காக மலாக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை இரவு மணி 10.40-க்கு Jalan Tun Perak-கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

சிலாங்கூர், ஷா ஆலாமைச் சேர்ந்த அந்த கடைசி ஆண்டு மாணவர் ஐந்தாவது மாடியின் வராண்டாவில் விழுந்துகிடந்தார்.

எனினும் அவர் பகடிவதையால் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, மலாக்கா தெங்கா போலீஸ் தலைவர் Christopher Patit கூறினார்.

அவ்விளைஞர் தற்கொலைக்கு முயற்சிப்பது இது இரண்டாவது முறையாகும்;

ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு ஜோகூர், மூவாரில் தங்கியிருந்த போது அவர் அம்முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!