Latestமலேசியா

மலாக்கா நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் விபத்து; அறுவர் காயம்

மலாக்கா, செப் 25 – அலோர்காஜா ,

மலாக்கா தெங்கா- ஜாசினில் (Lebuh AMJ) வில் செங்கிற்கு அருகே இன்று காலை மணி 6.30 அளவில் ஆறு வாகனங்கள் விபத்திற்குள்ளானதில் அறுவர் காயம் அடைந்தனர். Mitsubisi Triton, இரண்டு BMW கார்கள், Perodua Azia, Myvi மற்றும் Nissan Almera ஆகியவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர்
கிறிஸ்தோபர் பாதிட் ( Christopher Patit ) தெரிவித்தார். .

PiKap Triton வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பண்டார் மலாக்காவிலிருந்து செங் நோக்கி செல்லும் சாலையின் மையப் பகுதியில் மோதி கவிழ்ந்ததில் எதிரே வந்த ஐந்து கார்கள் அதனை மோதி கவிழ்ந்தன.

இதனைத் தொடர்ந்து காயத்திற்குள்ளான அறுவர் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக Christopher Patit வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இதற்கு முன்னதாக அந்த விபத்து தொடர்பான 46 மற்றம் 31 வினாடிகளைக் கொண்ட காணொளி டிக்டோக்கில் பகிப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!