
மலாக்கா, ஜனவரி-25 – மலாக்கா, பூலாவ் காடோங்கில், வழிதவறி வந்த குட்டி முதலை ஒன்றை பொது மக்கள் துணிச்சலுடன் பிடித்தனர்.
குடியிருப்பு பகுதிக்கு அருகே அந்த முதலை காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், சிலர் எளிய கருவிகளை பயன்படுத்தி அந்த குட்டி முதலையைப் பாதுகாப்பாக பிடிப்பது தெரிகிறது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பிடிக்கப்பட்ட குட்டி முதலை, பின்னர் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இயற்கை வாழ்விடங்களில் ஏற்பட்ட மாற்றம் அல்லது நீர்ப்பெருக்கு காரணமாக, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரக்கூடும்…
எனவே, இவ்வாறான சூழ்நிலைகளில் பொது மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், அவர்களாகவே நடவடிக்கையில் இறங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



