Latestமலேசியா

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் RM50,000 மானியம்; கோபிந்த் சிங் RM25,000 மானியம்

கோலாலம்பூர் அக் 11-
மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் RM50,000 மானியம் வழங்கவுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த சிங் டியோ அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை ஜாலான் ஈப்போவிலுள்ள உணவகத்தில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதனை கூறினார்.

அதே சமயத்தில் தமது அமைச்சின் சார்பாக RM25,000 வழங்குவதாகவும் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார்.

தமிழ் ஊடகங்கள் மலேசிய சமூகத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் முக்கிய குரலாக உள்ளன. தமிழ் ஊடகங்களும் மற்ற மொழி ஊடகங்களுடன் இணைந்து மலேசிய சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் செயல்படுகின்றன.

அரசாங்கம் , எல்லா மொழி ஊடகங்களின் வளர்ச்சிக்கும் சமமான ஆதரவு அளிக்கும் என்று கோபிந்த் சிங் டியோ உறுதி அளித்தார்.

இந்நிலையில், இவ்வாண்டு தீபாவளி விருந்தை சிறப்பாக நடத்த நிதி உதவி வழங்கிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!