Latestஉலகம்மலேசியா

மலேசியாவின் TVET மன்றத்திற்குச் சீனா ஆதரவு; துணைப் பிரதமர் சாஹிட்

கோலாலம்பூர், அக்டோபர்-17,உலக TVET மன்றத்தை அமைப்பதற்கான மலேசியாவின் பரிந்துரைக்கு சீனா கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

அதோடு, பெய்ஜிங் அதனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

சீனத் துணைப் பிரதமர் Ding Xuexiang மற்றும் அந்நாட்டு கல்வி அமைச்சர் ஆகியோர் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக Tianjin நகரில் நடைபெற்ற 2026 உலக தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி மாநாட்டில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத் திறன்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளர் மேம்பாட்டுக்காக நாடுகளையும் தொழில்துறைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு நிலையான பன்னாட்டு தளமாக இந்த உத்தேச மன்றம் விளங்கும் என்றார் அவர்.

​மலேசியாவில் 2020 முதல் 2025 வரை TVET துறையின் ஈடுபாடு 33 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் கிட்டத்தட்ட 96 விழுக்காட்டை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

AI மற்றும் செமிகண்டக்டர் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த இருவழி ஒத்துழைப்பு இளைஞர்களுக்குப் பெருமளவில் உதவும் என்று சாஹிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்பின் மூலம் மலேசியா 2024-ஆம் ஆண்டில் 5,125 பயிற்சி வாய்ப்புகளையும், 2026-ஆம் ஆண்டடுக்கு மேலும் 2,500 பயிற்சி இடங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!