Latestமலேசியா

மலேசியாவில் கூடுதல் நாள் தங்கிய இந்தோனேசிய மாதுவுக்கு ரி.ம 5,000 அபராதம்

ஜோகூர் பாரு, ஜன 27 – 53 வயதுடைய இந்தோனேசிய மாது ஒருவர் 

மலேசியாவில்  முறையான பெர்மிட் அல்லது ஆவணமின்றி  தங்கிய  குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து   Yong Peng  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  இன்று   5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்த அபராதத் தொகையை செலுத்தாவிட்டால்  ஆறு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென   நான்கு பேரக்குழந்தைகளை கொண்ட  Siti என்ற மாதுவுக்கு 

 மாஜிஸ்திரேட் அருன் நோவல் தாஸ் ( Arun Noval Dass )  உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து அப்பெண்  அபராத தொகையை  முழுமையாக செலுத்தினார்.

ஜோகூர் பாரு  Jalan Suasa வில்    ஜனவரி 21 ஆம்தேதி காலை மணி 11.30 அளவில்  அவர்  இக்குற்றத்தை புரிந்ததாக  குற்றஞ்சாட்டப்பட்டார்.   

மாவட்ட குற்றவியல்துறை மேற்கொண்ட வழக்கமான  சோதனை 

நடவடிக்கையின்போது  Siti கைது செய்யப்பட்டதாக  கூறப்பட்டது.

 நாட்டிற்குள் சட்டப்பூர்வமாக நுழைந்ததற்கான பதிவுகள் அல்லது 

சட்டப்பூர்வ ஆவணங்களை அவர் கொண்டிருக்கவில்லையென குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையின்  மூலம் தெரியவந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!