மோஸ்கோ, டிசம்பர்-24 – மலேசியா, பிரேசில், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நேரடி விமானப் பயணச் சேவையை தொடங்குவது குறித்து ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அம்மூன்று நாடுகளும் அதே விருப்பத்தைக் கொண்டுள்ளதாக ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் Roman Starovoyt கூறினார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நாடுகளின் நிலவரங்களை கண்காணித்து வருவதாகவும், கலந்தாய்வுகளைத் தொடர ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
எங்களின் பயணப் பாதைக் கட்டமைப்பு அடிக்கடி மாறும் தன்மையுடையது; அந்த நேரத்திற்கு எது முக்கியமோ அதற்கு முன்னுரிமை வழங்கி அனைத்துலக விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவோம் என்றார் அவர்.
அவ்வகையில் பல்வேறு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பயணிகளின் எண்ணிக்கைத் தொடர்பில் ஆராயப்படுகிறது.
பயணிகளின் எண்ணிக்கை ஊக்கமளிக்கும் வகையிலிருந்தால், அம்மூன்று நாடுகளுக்கும் குறிப்பிட்ட நேரடி விமானச் சேவைகளை ஏற்படுத்துவதில் பிரச்னை இருக்காது என Starovoyt சொன்னார்.