மித்ராவையும் தாண்டி இந்தியச் சமூகத்துக்கு அரசாங்கம் பல்வேறு வகையில் உதவுகிறது – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – இந்தியச் சமூகத்தை அரசாங்கம் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
குறை சொல்பவர்களின் கண்களுக்கு மித்ரா மட்டுமே தெரிகிறது; மித்ரா மூலம் மட்டுமே இந்தியச் சமூகத்திற்கு அரசாங்க உதவிகள் கிடைப்பதாக எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், மித்ராவுக்கு வெளியேயும் இந்தியச் சமூகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
உதாரணத்திற்கு, 2022-ல் STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் மூலம் இந்தியச் சமூகத்திற்கு 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது; அதுவே இவ்வாண்டு 972 மில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர, இந்தியர்களுக்காக 1.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் வீடமைப்புக் கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை மக்களவையில் பிரதமருக்கான கேள்வி பதில் நேரத்தின் போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாற் கூறினார்.