
கோலாலம்பூர், அக்டோபர்-7,
மலேசிய இந்தியச் சமூக உருமாற்ற அமைப்பான மித்ராவின் பங்கு நலத்திட்ட அடிப்படையிலிருந்து நீடித்த சமூக–பொருளாதார மேம்பாட்டை நோக்கி மாற்றப்பட வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டிருப்பதாக, மலேசிய கிராமப்புற மனிதவள மேம்பாட்டு அமைப்பான DHRRA Malaysia கூறியுள்ளது.
மித்ரா 2008-ஆம் ஆண்டிலிருந்து இந்தியச் சமூக முன்னேற்றத்திற்காக இயங்கி வந்தாலும், நிர்வாக மாற்றங்களும், கடந்த பத்து ஆண்டுகளாக மாற்றமில்லாத RM100 மில்லியன் வருடாந்திர நிதி ஒதுக்கீடும் அதன் செயல்திறனை பாதித்துள்ளதாக, DHRRA தலைவர் டத்தோ எஸ். சரவணன் எம். சின்னப்பன் தெரிவித்தார்.
குறிப்பாக இவ்வாண்டு ஏற்கனவே ஒப்புதல் தரப்பட்ட திட்ட நிதிகள் திரும்பப் பெறப்பட்டதால் கல்வி, பயிற்சி, சமூக மேம்பாட்டு முயற்சிகள் தாமதமடைந்துள்ளன.
தற்போது மித்ரா பட்ஜெட்டின் 40 முதல் 50 விழுக்காடு நிதி குறுகியகால நலத்திட்டங்களுக்கு செலவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மித்ராவை சட்டப்பூர்வமான அமைப்பாக உருவாக்கி, பட்ஜெட்டை உயர்த்தி, மாவட்ட மட்டத்திலும் செயல்படுத்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பாக உருவாக்குவது ஆகிய ஐந்து முக்கிய சீர்திருத்தங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதமரிடம் DHRRA கோரிக்கை வைப்பதாக, இன்று வெளியிட்ட அறிக்கையில் சரவணன் கூறினார்.வ்