
“மின்னியல் அங்க்பாவ்” மோசடி: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸ் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-14,
சீன சமூகத்தினர் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இறுதிக் கட்ட தயார் நிலையில் இருக்கும் இச்சமயத்தில், புதிய “மின்னியல் அங்க்பாவ்” மோசடி குறித்து எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சிவப்பு அங்க்பாவ் உறைகளில் QR குறியீடு வைத்து வீடுகளின் முன்பாக வைக்கப்படுகின்றன.
இவை சாதாரண பண்டிகை பரிசு போலத் தோன்றினாலும், அந்த QR குறியீட்டை நீங்கள் _scan_ செய்தால், அது மோசடி இணையத் தளங்களுக்கு உங்களை கொண்டுச் செல்லலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அத்தகைய இணையத் தளங்கள் வங்கிக் கணக்கு தகவல்கள், கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை திருடும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
எனவே, பொது மக்கள் அறிமுகமற்ற QR குறியீடுகளை _scan_ செய்யாமல் இருக்கவும், சந்தேகத்திற்குரிய _ link_ இணைப்புகளை நேரடியாக வங்கிகள் அல்லது அதிகாரப்பூர்வ தளங்களில் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பண்டிகை குதூகலத்தில் எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியமே என வலியுறுத்தப்படுகிறது.



