குவாந்தான், நவம்பர்-19 – மின்னியல் சிகரெட், vape இரண்டையும் அரசாங்கம் முழுவதுமாகத் தடைச் செய்ய வேண்டுமென, பஹாங் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.
அம்மாநிலத்தில் போதைப்பொருள் பழக்கம் குறிப்பாக இளையோர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
அப்பழக்கத்திற்கு தொடக்கப் புள்ளியாகவும் இந்த vape புகைக்கும் பழக்கம் உள்ளது.
எனவே தம்மைக் கேட்டால், மலேசியா மட்டுமல்ல உலகம் முழுவதும் vape தடைச் செய்யப்பட வேண்டுமென அல் சுல்தான் அப்துல்லா வலியுறுத்தினார்.
Vape பயன்பாடு உடல்நலத்திற்கும் கேடு என்பதால், அதனைத் தடைச் செய்வது குறித்து அரசாங்கத்திடம் பேசப் போவதாக அவர் சொன்னார்.
அண்டை மாநிலமான ஜோகூரில், அதன் சுல்தான் உத்தரவின் படி vape பொருட்களின் விற்பனைக்கு 2016-ஆம் ஆண்டு முதலே தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.