Latestமலேசியா

மியன்மார் வேலை வாய்ப்பு மோசடி கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்ட 15 மலேசியர்களுக்கு பேங்கோக்கில் தூதரக உதவி

பேங்கோக், பிப்ரவரி-16 – மியன்மாரில் வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 15 மலேசியர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்குவதற்காக, பேங்கோக்கில் உள்ள மலேசியத் தூதரகம் இன்று தூதரகச் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

Marwan Mustafa Kamal எனும் தூதரக அதிகாரி அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

அந்த 15 பேரையும் தாயகம் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் Marwan ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டது.

மியன்மாரிலிருந்து தாய்லாந்திற்கு புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட 261 பேரில் இந்த 15 மலேசியர்களும் அடங்குவர்.

21 முதல் 68 வயதிலான அவர்களில் மூவர் பெண்களாவர்.

வட தாய்லாந்தில் இராணுவ முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

மனித கடத்தல் நடவடிக்கைகளுக்கு பெயர்போன 2 எல்லை நகரங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை முன்னதாக மியன்மார் அதிகாரிகள் மீட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!