
குவால திரங்கானு, மே-13 – ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தொடர்பான சர்ச்சையில் புதிதாக பாஸ் கட்சி இணைந்திருக்கிறது.
Himpunan Teguh Memimpin Terengganu என்ற பேரணிக்கான சின்னத்தில், முழுமையற்ற நட்சத்திர மூலைகள் இருப்பதால் திரங்கானு பாஸ் பகிரங்க மன்னிப்புக் கோரியது.
அச்சின்னத்தை உடனடியாக மீட்டுக் கொண்டு, திருத்தப்பட்ட புதியச் சின்னம் வெளியிடப்பட்டிருப்பதாக, அப்பேரணியின் செயலகம் அறிக்கை வாயிலாகக் கூறியது.
திரங்கானு, கெமாமானில் மே 29 முதல் 31 வரை நடைபெறும் அப்பேரணிக்கான விளம்பர போஸ்டர்கள் கடந்த வாரம் விநியோகிக்கப்பட்டன.
அதிலிருந்த சின்னத்தில் இடது பக்கத்தில் இடம் பெற்றிருந்த மலேசியக் கொடியில், மஞ்சள் நிற நட்சத்திரத்தில் 14 மூலைகளுக்குப் பதிலாக 11 மூலைகள் மட்டுமே இருந்தால் அது சர்ச்சையானது.
அந்த 14 மூலைகளானது, நாட்டின் 13 மாநிலங்களையும் கூட்டரசு பிரதேசத்தையும் குறிப்பதாகும்.
ஜாலூர் கெமிலாங் கொடியை உட்படுத்தி அண்மையக் காலத்தில் நடந்ததுள்ள ஐந்தாவது தவறு இதுவாகும்.
முதலில் AI உருவாக்கியக் கொடியைப் பயன்படுத்தி 2 சீன நாளேடுகள் சர்ச்சையில் சிக்கின; பிறகு மலேசியக் கண்காட்சியில் பங்கேற்ற சிங்கப்பூர் நிறுவனமும் அதே தவற்றை செய்தது.
2 வாரங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாராத வகையில், கல்வி அமைச்சே அத்தவற்றை புரிந்தது.
2024 SPM தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வறிக்கையில் தவறாக தேசியக் கொடி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது