
செலாயாங், ஜனவரி-11 – சிலாங்கூர், செலாயாங், தாமான் விலாயாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 2 மேல்மாடி வீடுகள் நேற்றிரவு தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்தன.
இரவு 8.45 மணிக்கு அவசர அழைப்பு வந்ததும், ஜிஞ்ஜாங், கோம்பாக் செலாத்தான் மற்றும் ஹங் துவா தீயணைப்பு நிலையங்களில் இருந்து 25 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
அப்போது, நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ, 2 வீடுகளை முழுமையாக அழித்திருந்தது.
தீ பரவாமல் தடுக்க offensive மற்றும் defensive முறைகள் பயன்படுத்தப்பட்டன.
இரவு 9.20 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 10.50 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது.
உயிரிழப்பு எதுவும் இல்லை.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.



