
வாஷிங்டன், அக்டோபர்-11
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனி கூடுதலாக 100 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், சீனாவுடன் வர்த்தக பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளார்.
இப்புதிய வரி நவம்பர் 1-ஆம் தேதி அமுலுக்கு வரும் என்றார் அவர்.
அதோடு, சீன அதிபர் சீ சின் பிங் (Xi Jin Ping) உடனான உச்சநிலை பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் எச்சரித்தார்.
சீனாவின் அரிதான கனிமங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடு “மிகவும் தாக்கம் கொண்டது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின் பங்குச் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன; நாஸ்டாக் குறியீடு 3.6% மற்றும் எஸ் & பி 500 குறியீடு 2.7%-மாக வீழ்ச்சியடைந்தது.
சீனா தனது வர்த்தக தடைகளைத் தொடர்ந்தால், அமெரிக்கா முக்கிய மென்பொருட்களின் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கும் என்றும் டட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
இந்நடவடிக்கை, அமெரிக்கா–சீனா உறவுகளில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இப்படி திடீரென ட்ரம்ப் கோபப்பட உண்மைக் காரணம் என்ன என்பது தெரியவில்லை…