![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/FW1452273_PTJ26_06022025_PMX.jpg)
புத்ரா ஜெயா, பிப் 6 – முஸ்லீம்கள் அல்லாதாரின் விழாக்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் முஸ்லீம் அல்லாதாரின் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் பங்கேற்பதற்கான முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற நிகழ்வுகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவதற்கான தெளிவான விதிகளை அரசாங்கம் வகுத்து வருவதாக சமய விவகார அமைச்சர் Na’im Mokhtar வெளியிட்ட அறிக்கை குறித்து செய்தியாளர்கள் வினவியபோது, இந்த விவகாரத்தை நாளை அமைச்சரவை விவாதிக்கும் என்று அன்வார் மறுமொழி தெரிவித்தார்.
இதுபோன்ற நிகழ்வுகளில் முஸ்லிம்களின் ஈடுபாடு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதில் தெளிவு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக Na’im நேற்று கூறியிருந்தார்.
ஆலோசனை தெரிவிக்கப்பட்ட விதிகளின்படி, சமய பிரச்சாரம் அல்லது முஸ்லிம்களை சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சிகளுடன் கூடிய பேச்சுக்கள் அல்லது பாடல்கள் இருக்க முடியாது, அதே நேரத்தில் இஸ்லாம் தவிர மற்ற சமயங்களின் அடையாளங்களை வளாகத்தில் காட்ட முடியாது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் நிகழ்வில் முஸ்லிம்களை ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியையும், இஸ்லாமிய அதிகாரிகளின் கருத்துக்களையும் பெற வேண்டும் என்றும் நயிம் கூறியிருந்தார்.
இந்த ஆலோசனைகள் முஸ்லீம் எம்.பிக்களுக்கு (MP) சிரமத்தை ஏற்படுத்தலாம் என Bangi நாடாளுமன்ற உறுப்பினர் Syahredzan Johan உட்பட பலர் தெரிவித்திருந்தனர்.