மூவார், டிசம்பர்-19, ஜோகூர், மூவார் Taman Sri Treh-வில் வீட்டொன்றில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட இருவரை போலீஸ் தேடுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அது குறித்து தங்களுக்குப் புகார் வந்ததாக, மூவார் போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிடென்டண்ட் முஹமட் அய்டில் ரோனே அப்துல்லா (Superintenden Muhammad Aidil Roneh Abdullah) தெரிவித்தார்.
கொள்ளையர்கள் பயன்படுத்தியக் கார் மலாக்கா, ஜாசினில் சிக்கியுள்ளதால், விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன என்றார் அவர்.
தகவல் தெரிந்த பொது மக்களும் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
முகமூடி அணிந்திருந்த இருவர் கையில் ஆயுதத்துடன், Taman Sri Treh-வில் உள்ள ஒரு வீட்டை உடைத்துக் கொள்ளையிடும் CCTV காட்சிகள் முன்னதாக வைரலாகின.