Latestஉலகம்

மெக்சிகோ அழகியை ஏற்பாட்டாளர் ‘முட்டாள்’ என திட்டியதால் தாய்லாந்தில் நடைபெறும் Miss Universe 2025 உலக அழகிப் போட்டியில் சர்ச்சை

பேங்கோக், நவம்பர்-6,

மெக்சிகோ அழகியை ஏற்பாட்டாளர் ‘முட்டாள்’ என திட்டியதால் தாய்லாந்தில் நடைபெறும் Miss Universe 2025 உலக அழகிப் போட்டி கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

முன்னேற்பாட்டு நிகழ்வின் போது, மெக்சிகோ அழகி ஃபாத்திமா போஷ் (Fatimah Bosch) மீது நிகழ்ச்சி நிர்வாகி நவாட் இட்சரக்ரிசில் (Nawat Itsaragrisil) அந்த வெளிப்படையாக தாக்குதலை நடத்தினார்.

ஃபாத்திமா, தாய்லாந்தை விளம்பரப்படுத்தும் படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்ததால், அவரை “dummy” என நவாட் அழைத்தார்.

இந்த அவமானத்தால் கண்கலங்கிய ஃபாத்திமா, “இது ஒரு பெண்ணுக்கான மரியாதையில்லை” என எதிர்வாதம் செய்தார்.

இதையடுத்து நடப்பு Miss Universe அழகி விக்டோரியா தெய்ல்விக் (Victoria Theilvig) உட்பட நிகழ்ச்சியில் இருந்த பல போட்டியாளர்கள், ஃபாத்திமாவை ஆதரித்து மேடையை விட்டு வெளியேறினர்.

இந்நிகழ்வு பெரும் சர்சையாகி உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், நவாட்டின் செயல் ‘அவமானகரமானது’ என Miss Universe அமைப்பின் தலைவர் Paul Rocha Cantu செய்தியாளர் சந்திப்பில் ஒப்புக் கொண்டார்.

நடந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என்றும், “பெண்களின் வலிமை மற்றும் மரியாதை” என்ற Miss Universe போட்டியின் அடிப்படைக் கோட்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

ஃபாத்திமாவுக்கு அவர் வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே தமது அச்செயலுக்கு மன்னிப்புக் கோருவதாக, நவாட் தனியாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அழுதுகொண்டே கூறினார்.

பின்னர் வெளியிட்ட வீடியோவில், 74-ஆவது Miss Universe போட்டியை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கமாக இருந்ததாகக் கூறிய நவாட், சம்பவம் நடந்த கையோடு மெக்சிகோ அழகியிடமும் மற்றவர்களிடமும் மன்னிப்புக் கோரியதாகத் தெரிவித்ததார்.

போட்டி ஏற்பாட்டுக் குழுவிலிருந்தும் அவர் லிலகிக் கொண்டர்.

இம்மாத இறுதியில் நடைபெறும் Miss Universe போட்டிகாக்க 122 நாடுகளின் அழகிகள் பேங்கோக்கில் முகாமிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!