Latestமலேசியா

மைமாவின் யோகா மற்றும் ட்ராக்ஸ்சின் TRAACS ARTS CARNIVAL அரங்கேற்றம் கண்டது

கோலாலம்பூர், ஏப் 9 – 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் மட்டுமின்றி பல இன மக்களும் பயன் அடையும் வகையில் பல்வேறு சிறப்பான நிகழ்வுகளை நடத்திவரும் , ட்ராக்ஸ்(TRAACS) மற்றும் (MYMA) தேசிய மற்றும் அனைத்துலக யோகா போட்டிகளுடன் கலச்சார மற்றும் உணவுப் பொருட்களையும் அறிமுகப்படுத்தி இவ்வாண்டு மீண்டும் வரலாறு படைத்தது.

ஏப்பரல் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம்தேதிவைரை சைபர் ஜெயாவிலுள்ள லிம் கொக் விங் (LIM KOK WING UNIVERSITY) பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிளான MYMAவின் யோகா மற்றும் TRAACS இன் (TRAACS ARTS CARNIVAL) “BLOOMS:BRUSHES TO BEATS எனும் கருப்பொருளுடன் கலை கலாச்சாரம், கைவினை நிகழ்வுகளுடன் அரங்கேற்றம் கண்டது.

இம்முறை மூன்று நாட்களுக்கு TRAACS ARTS CARNIVAL நிகழ்வில் பலதரப்பட்ட அங்காடி கடைகள் இடம்பெற்றிருந்ததோடு ஆடைகள், ஆபரணங்கள், மருதாணி, உள்ளுர் மற்றும் வெளியூர் உணவு அங்காடிகள் மட்டுமின்றி மறுசுழற்சி பொருட்களை கொண்டு கைவினை பொருட்களை உருவாக்கும் பயிற்சி பட்டறைகளும் , ஓவியம் மற்றும் இசை சார்ந்த பயிற்சி பட்டறைகளும் அந்தந்த துறைகள் சார்ந்த வல்லுநர்களால் நடத்தப்பட்டன.

ஏப்ரல் 4ஆம் தேதி காலையில் தேசிய நிலையிலான யோகா போட்டி மற்றும் இதர நிகழ்ச்சிகளை முன்னாள் துணையமைச்சர் கோகிலன் பிள்ளை, லிம் கோக் விங் பல்கலைக்கழகத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ Tiffanee Marie Lim, IYSF எனப்படும் அனைத்துலக யோகா சம்மேளன தலைவர் ராஜஸ்ரீ சௌத்ரி, MYMA தலைவர் ஸ்ரீதரன் கிருஷ்ணன் , MYMA & TRAACS அமைப்பாளரும், தலைவருமான விஜயா சுப்ரமணியம் ART Market மலேசியாவின் தோற்றுவிப்பாளர் MS Rita ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

அன்றைய தினம் மாலை ஆறு மணியளவில் அனைத்துலக யோகா யோகா போட்டியின் தொடக்கவிழாவில் இதர பிரமுகர்களுடன் மலேசியாவுக்கான நேப்பாள தூதர் Netra Prasa ட்டும் கலந்து கொண்டு அப்போட்டியை தொடக்கிவைத்தார்.

சுவிட்சர்லாந்தின் பிரசித்தி பெற்ற அனைத்துலக யோகா அமைப்புடன் கைகோர்த்த மைமா தேசிய அளவிலான யோகா போட்டியில் அனைத்து பிரிவிலும் வெற்றிப்பெற்றதோடு இப்போட்டியில் முதல் மூன்று வெற்றியாளர்கள் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்ற அனைத்துலக நிலையிலான யோகா போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போட்டியில் 23க்கும் மேற்பட்ட நாடுகளிலருந்து 150க்கும் மேலான போட்டியாளர்கள் பங்கேற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பரதம், குச்சிப்புடி, சீனர்களின் சிங்க நடனம், சிலம்பம், உருமி மேளம் என பல கண்கவர் அங்கங்களை ஒரு கூரையின் கீழ் அரங்கேற்றி ட்ராக்ஸ் மற்றும் மைமா குழுமத்தினர் சாதனை படைத்தனர்.

இந்த மூன்று நாள் நிகழ்ச்சியிலும் 600க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!