
புத்ராஜெயா, நவம்பர்-14, மோசடி தடுப்பு சேவைக்காக மாதம் RM10 கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் விளக்கம் பெற மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் நியாயமானதா என்பதை ஆராய்வது முக்கியம் என, தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை MCMC அடையாளம் கண்டு, சேவையின் விவரங்களை ஆய்வு செய்யும் என்றார் அவர்.
முன்னதாக, பயனீட்டாளர் சங்கங்கள் மற்றும் கணினி நிபுணர்கள் இந்த RM10 கட்டணத்தை கடுமையாக விமர்சித்தனர்.
பயனர்களின் பாதுகாப்பு என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அடிப்படை பொறுப்பு என்றும், இலாப நோக்கமாக அது இருக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்



