
கோலாலம்பூர், அக்டோபர்-24,
ம.இ.கா தன் அரசியல் வலிமையையும் செல்வாக்கையும் மீண்டும் பெற விரும்பினால், ஒரு வலுவான மலாய்க்கார கட்சியுடன் அது இணைய வேண்டும்.
ஆனால் அது அம்னோ அல்ல என, பிரபல அரசியல் ஆய்வாளர் ஷாபுடின் ஹுசின் (Shahbudin Husin) கூறுகிறார்.
தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலக ம.இ.கா முடிவெடுத்தால் அது சரியானதாகவே இருக்கும்; காரணம், அம்னோ இப்போது மலாய் சமூகத்தின் பிரதானக் கட்சியாக இல்லை.
அண்மையத் தேர்தல்களில் மலாய் வாக்காளர்களின் 70 விழுக்காடு ஆதரவு பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளுக்கு சென்றுள்ளதை அவர் நினைவுப்படுத்தினார்.
நாட்டில் இந்தியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் ஒன்று கூட இல்லாததால், ம.இ.காவின் வெற்றிக்கு வலுவான மலாய் கூட்டணிதான் முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதே சமயம், பிரிந்துசெல்ல நினைக்கும் ம.இ.காவை விமர்சிக்கும் முன், அம்னோ தனது. தற்போதைய நிலையை முதலில் எண்ணிப் பார்க்க வேண்டுமென்றும் ஹாபுடின் அறிவுறுத்தினார்.
தேசிய முன்னணியில் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள ம.இ.கா அடுத்த மாதம் அதன் பொதுப் பேரவையின் போது முக்கிய முடிவை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அது 80 ஆண்டுகால பந்தத்தை முறிக்குமா அல்லது புதுப்பிக்குமா என்பது பேராளர்களின் கையில் தான் உள்ளது.



