
ஷா அலாம், ஜன 12 – (யுபிஎஸ்ஆர்) எனப்படும் தொடக்கப்பள்ளிக்கான தேர்வு மற்றும் மூன்றாம் படிவ மாணவர்களுக்கான (பிடி3) தேர்வுகளை மீண்டும் நடத்துவதற்கான திட்டம் தொடர்பாக விரிவான ஆய்வை நடத்த கல்வி அமைச்சு கால அவகாசம் கோரியுள்ளது.
மாணவர்களின் முழுமையான வளர்ச்சியில் அவற்றின் செயல்திறன் உட்பட நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள மதிப்பீடுகளை செயல்படுத்துவதை மதிப்பீடு செய்ய இந்த ஆய்வு கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பட்லீனா சிடேக் (Fadhlina Sidek )தெரிவித்தார் .
இந்த ஆய்வு நடந்து கொண்டிருப்பதால் நாங்கள் சிறிது கால அவகாசத்தை கேட்கிறோம், மேலும் இது தொடர்பாக ஏற்கனவே தேசிய கல்வி ஆலோசனைக் குழுவிற்கு தாம் ஆலோசனை தெரிவித்திருப்பதையும் Fadhlina சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சு நிலையில் , சில கருத்துக்கள் இருப்பதால் அதை அமைச்சரவையில் பரிசீலனைக்காக சமர்ப்பிப்பதற்கு முன்பு ஒரு முழுமையான ஆய்வை மேற்கொள்வோம். இதற்கு கல்வி அமைச்சிற்கு நேரம் தேவை என அவர் கூறினார்.
இன்று காலை ஷா அலாம் எல்மினாவில் Regent தோட்ட சீன தேசிய தொடக்கப் பள்ளியில் 2026/2027 கல்வி ஆண்டின் முதல் நாளைப் பார்வையிட்ட பிறகு அவர் பேசினார். இந்த நிகழ்வில் கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா வோவும் (Wong Kah Woh ) கலந்துகொண்டார்.
இந்த ஆய்வில் பெற்றோரின் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டவற்றை மதிப்பீடு செய்வதிலும் கவனம் செலுத்தப்படும் என்று Fadhlina கூறினார்.



