Latestமலேசியா

ரஷ்யாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் குறித்து மலேசியா பேச்சுவார்த்தை – பிரதமர் அன்வார் தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசியா அதன் எதிர்கால எரிசக்தி பாதுகாப்பை உறுதிச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அவ்வகையில், தேசியப் பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ், ரஷ்யாவுடன் எண்ணெய் விநியோக பேச்சுவார்த்தையை தொடங்கவிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

மோஸ்கோவுடன் வலுவான இரு தரப்பு உறவு இருப்பதால் இது எளிதாகும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னதாக, ஈரானுடன் மலேசியா மேற்கொண்ட அரசத் தந்திர முயற்சிகள் காரணமாக, பெட்ரோனாஸ் எண்ணெய்க் கப்பல்கள் Hormuz நீரிணையை பாதுகாப்பாக கடந்து வந்ததை அன்வார் சுட்டிக் காட்டினார்.

நாட்டின் எரிபொருள் விநியோகம் வரும் ஜூன் இறுதி வரை போதுமான அளவில் இருக்கும் என பெட்ரோனாஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.

நேற்று மட்டுமே, அதன் Ocean Thunder கப்பல், ஈராக் பஸ்ராவிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை, ஜோகூர், பெங்கராங் (Pengerang) ஒருங்கிணைந்த வளாகத்திற்கு அது வெற்றிகரமாக கொண்டு வந்து சேர்த்தது.

உலகச் சந்தைகள் அதிர்வில் இருக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகள் கூட ரஷ்ய எண்ணெயை தேடி அலைகின்றன.

இந்நிலையில், மக்களை விலை உயர்வு மற்றும் விநியோகத் தட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்றும் நோக்கத்துடன், மலேசியா அதன் அரசத் தந்திர முயற்சிகளை முன்னெடுக்கிறது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!