Latest
ரெம்பாவில் மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதி UiTM மாணவிகள் இருவர் உயிரிழப்பு

ரெம்பாவ், ஜனவரி-5,
நெகிரி செம்பிலான், ரெம்பாவில் UiTM பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 2 மாணவிகள், மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று மாலை சுமார் 4 மணியளவில் பெக்கான் லூபோக் சீனா சாலையில் நிகழ்ந்தது.
வளைவான சாலையில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த இருவரும் 19 வயதுடைய மாணவிகள் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் உடல்கள் சவப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.
விபத்து நேரத்தில் வானிலை சீராக இருந்ததாகவும், இச்சம்பவம் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸார் கூறினர்.



