Latestஉலகம்மலேசியா

ரொனால்டோ கோடீஸ்வரராக இருக்கலாம், ஆனால் சொத்து மதிப்பில் முதலிடம் அவருக்கல்ல…

லண்டன் – ஆகஸ்ட்-1 – உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர் கிறிஸ்தியானோ ரொனால்டோ, அதிகாரப்பூர்வமாக கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைந்துள்ளார். கால்பந்து உலகிலும் சமூக ஊடங்களிலும் ஏற்கனவே எண்ணிடலங்கா சாதனைகளைப் படைத்த ரொனால்டோவுக்கு, இது இன்னொரு மகுடமாகும்.

சவூதி அரேபிய கிளப்பான Al-Nassr-ருடன் புதிய ‘மெகா’ ஒப்பந்தம் போட்டதிலிருந்து, உலக விளையாட்டு வணிகத் துறையின் ஜாம்பவான்களுக்கு ஈடாக ரொனால்டோவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

அவருக்கு அங்கு 700 மில்லியன் டாலர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 48 மில்லியன் டாலர் போனஸ் வடிவிலும், Al-Nassr கிளப்பில் 15 விழுக்காடு பங்குரிமையையும் அவர் கொண்டுள்ளார்.

இந்நிலையில், 2020-ஆம் ஆண்டிலிருந்து ரொனால்டோ சம்பாதித்த வருமானம் ஏற்கனவே 1 பில்லியன் டாலரை எட்டியிருந்தாலும், அவரின் நிகர சொத்து மதிப்பு இப்போது தான் முதன் முறையாக 1 பில்லியன் டாலரைத் தொட்டிருப்பதாக, celebritynetworth.com இணையத் தளம் தெரிவிக்கிறது.

Nike போன்ற ஜாம்பவான் நிறுவனங்களுடன் வாழ்நாள் ஒப்பந்தம் போட்டிருப்பதால் ரொனால்டோ கோடிகளில் புரளுகிறார்.

ரொனால்டோவுக்கு அடுத்து, கால்பந்தில் அவரின் பரம வைரியான லியோனல் மெசி (Lionel Messi) 850 மில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் உள்ளார்.

அமெரிக்கக் கால்பந்து லீக்கான MLS-சில் விளையாடும் Inter Miami அணிக்கு பெரும் தொகையில் மாறிச் சென்ற பிறகு மெசியின் சொத்து உயர்ந்துள்ளது.

ஆனால், ரொனால்டோவும் மெசியும் அருகில் நெருங்க முடியாத அளவுக்கும் ஒருவர் இருக்கின்றார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

புருணை அரச குடும்பத்தைச் சேர்ந்த Faiq Bolkiah என்பவரே அவராவார்.

புருணை சுல்தானின் உறவுக்கார பையனான Faiq, அந்நாட்டு தேசியக் கால்பந்து அணியின் கேப்டன் என்பதுடன், தாய்லாந்தின் முதன்மை லீக்கில் விளையாடும் Ratchaburi அணிக்கு விளையாடி வருகிறார்.

அவரின் நிகர சொத்து மதிப்பு வாயைப் பிளக்க வைக்கும் அளவுக்கு 20 பில்லியன் டாலராகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!