
சிங்கப்பூர், மே 23 – கடந்த மே 3-ஆம் தேதியன்று நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் (PAP) மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் சிங்கப்பூர் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா சிறப்பாக நடந்தேறியுள்ளது.
இந்நிகழ்வு தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவையில், 9 அமைச்சர்கள், 12 மூத்த இணை அமைச்சர்கள் மற்றும் 8 இணை அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில், இணை அமைச்சர் ஒருவரின் பதவி நியமனம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, அமலுக்கு வரும், அவரது பதவியேற்பு தேதி, பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.