Latestஉலகம்

வங்காளதேசத்தில் வெடித்த புதிய வன்முறை; இளையோர் பேரணியில் நால்வர் பலி

டாக்கா, ஜூலை-17- வங்காளதேசத்தில் இளைஞர்கள் தலைமையிலான தேசியக் குடிமக்கள் கட்சி நடத்தியப் பேரணியில் வன்முறை வெடித்ததில், குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஏராளமானோர் அதில் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதையடுத்து சம்பவ இடத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டது.

அமைதியாகச் சென்ற பேரணியில் விஷமிகள் வேண்டுமென்றே குழப்பத்தை விளைவித்துள்ளதாக, இடைக்கால அரசின் தலைவர் முஹமட் யூனூஸ் (Muhammad Yunus) தனது X தளத்தில் தெரிவித்தார்.

“ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள், காவலுக்கு இருந்த போலீஸார், செய்தி சேரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர்; வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன; இதற்கு, பிரதமர் பதவியைத் துறந்து நாட்டை விட்டே ஓடிய ஷேக் ஹசீனா வாஜிட்டின் (Sheikh Hasina Wazed) அவாமி லீக் கட்சியினரே காரணம் என்றும் யூனூஸ் குற்றம் சாட்டினார்.

ஹசீனாவின் வீழ்ச்சிக்கு வித்திட்ட தங்களின் புரட்சிகர இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக அந்த இளைஞர்கள் அந்த அமைதிப் பேரணியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மாணவர் போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல் கடந்தாண்டு ஆகஸ்டில் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பியோடினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!