
கோலாலம்பூர், ஜனவரி 6 – கோலாலம்பூர் பாங்சார் நோக்கிச் செல்லும் Jalan Travers சாலையில் நீண்ட காலமாக இருந்து வந்த குழிகள், தற்போது முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளன.
இந்த பிரச்சினையை முன்வைத்து வெளிவந்த வணக்கம் மலேசியா செய்தியின் எதிரொலியாக ஒரு வாரத்திற்குள், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL அச்சாலையை முழுமையாக சரி செய்துள்ளது.
இன்று காலை மேற்கொண்ட ஆய்வில், பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையம் அருகிலுள்ள முக்கிய சாலை பகுதி தற்போது சமமாகவும் பாதுகாப்பாகவும் அதே வேலை பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கு முன், பல மாதங்களாக நீடித்த சாலை குழிகள் வாகன ஓட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தன. இந்த சாலை, விபத்துகளுக்கும் வாகன சேதங்களுக்கும் காரணமாக இருக்கலாம் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும், இது தினமும் பயன்படுத்தப்படும் முக்கிய சாலை என்பதால் நடவடிக்கை தாமதமானது குறித்தும் கேள்விகள் எழுந்த வண்ணமாக இருந்தன.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நகரத்தின் நல்ல பெயரையும் பாதுகாக்கும் நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.



