
கோலாலம்பூர், டிச 9 – கிழக்குக் கரை உட்பட இந்த புதன்கிழமைவரை கடுமையாக மழை பெய்யும் என்பதால் மிகவும் கவமான இருக்க வேண்டும் என MetMalaysia
எனப்படும் மலேசிய வானிலைத்துறை எச்சரித்துள்ளது. பஹாங்கில் குவந்தான்,
பெக்கான், ஜெரான்டுட், மாரான் ,ரொம்பின் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும்
திரெங்கானுவில் கெமமான் மற்றம் டுங்குனிலும் கடுமையாக மழை பெய்யும் என இன்று காலை 9 மணியளவில் மிட் மலேசியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் கிளந்தான் மற்றும் பெர்லீசிலும் ஒட்டுமொத்தமாக மழை மோசமாக இருக்கும் என்பதோடு உலு பேராக் மற்றும் கெடாவில் குபாங் பாசு,
கோத்தா ஸ்டார், பொக்கோ செனா, பாடாங் தெராப், பெண்டாங், சிக் மற்றும் பாலிங்கிலும் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பஹாங்கில் கேமரன் மலை, லிப்பிஸ், ரவுப் , பெந்தோங் ,தெமர்லோ மற்றும் பெரா ஆகிய வட்டாரத்திலும் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகூரில் சிகமாட், மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய இடங்களிலும் கடுமையாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.