
பொந்தியான், ஆகஸ்ட்-12,
ஜோகூர் பொந்தியானில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சண்டை தொடர்பில், 13 வயது பையன் உட்பட 14 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
Taman Kota Emas-சில் ஒரு cafe உணவகத்தின் முன்பு அதிகாலை 4 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, மாவட்ட போலீஸ் கூறியது.
தனது தம்பி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அதில் தாக்கப்பட்டதாக, புகார்தாரர் கூறியிருந்தார்.
இதையடுத்து 13 முதல் 26 வயதிலான அக்கும்பலை போலீஸ் கைதுச் செய்தது.
எதற்காக சண்டை மூண்டது என்பது குறித்து தகவல் இல்லை.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.