
ஜோர்ஜ் டவுன், ஜூலை 7 – விபத்திற்கு பின் பினாங்கு பாலத்தில் இருந்து கடலில் விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மீனவர்களால் மீட்கப்பட்டார்.
2 நிமிட 30 வினாடிகள் கொண்ட டிக்டோக் வீடியோவில் இந்த வியக்கத்தக்க மீட்பு நடவடிக்கை படம்பிடித்ததைத் தொடர்ந்து, பின்னர் அச்சம்பவம் வைரலாகியுள்ளது.
வீடியோவில், மீனவர்கள் தங்கள் படகை கடலில் மிதந்து கொண்டிருந்த நபரை நோக்கி செலுத்துவதைக் அந்த காணொளியில் பார்க்க முடிந்தது.
அந்த மோட்டார் சைக்கிளின் கியர் துண்டிக்கப்பட்ட நிலையில் , அந்த நபரின் மிதந்துகொண்டிருந்த இடத்தின் அருகே அவரது தலைக்கவசமும் மிதந்து கொண்டிருந்தது.
பாலத்தின் மேலிருந்து பார்வையாளர்கள் இக்காட்சியை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் மீனவர்கள் அந்த மோட்டார் சைக்கிளோட்டியை மின்னல் வேகத்தில் பாதுகாப்புடன் மீட்டனர்.
அந்த நபர் வேகமாகச் சென்றபோது ஒரு காரின் பின்னால் மோதியபின் , பாலத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதால் கடல் நீரில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
சரியான நேரத்தில் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு அந்த நபரை மீட்ட மீனவர்களை நெட்டிசன்கள் பாராட்டியதோடு அந்த சம்பவத்தை அற்புதமான அதிர்ஷ்டம் என்று வர்ணித்தனர்.