Latestமலேசியா

விபத்தில் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணம்

கோலாலம்பூர், நவம்பர் 3

சரவா, Sarikei , Jalan sare யில் இன்று காலை ஒரு காரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம் அடைந்த வேளையில் பெண்மணி ஒருவர் காயம் அடைந்தார். இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் Hyndai Atos கார் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் இறந்தனர்.

விபத்து நிகழ்ந்தபோது தனித் தனியாக மோட்டார் சைக்கிளில்
வந்த 43 வயதுடைய ஆடவரும் 58 வயதுடைய மற்றொரு ஆடவரும் மரணம் அடைந்தனர். காயம் அடைந்த 58 வயதுடைய பெண்மணி சுகாதார அமைச்சின் ஆம்புலண்ஸ் வண்டி மூலம் Sarkei மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டார். விபத்துக்குப் பின் கார் ஓட்டுநர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். அந்த நபரை தேடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!