Latest

விபத்தில் UniSZA மாணவர் உயிரிழந்த சம்பவம்; வாகனமோட்டி மனநல பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வந்தவர் – போலீஸ் உறுதி

கோலா தெரெங்கானு: Universiti Sultan Zainal Abidin (UniSZA) பல்கலைகழகத்தில் பயின்ற மாணவர் உயிரிழந்த சாலை விபத்தில் தொடர்புடைய Honda Jazz வாகனத்தை ஓட்டிய 32 வயதுடைய நபர், மனநலப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவரும் நபர் என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த ஆடவர் கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து Sultanah Nur Zahirah மருத்துவமனையில் (HSNZ) முக்கிய மனச்சோர்வு நோய் அதாவது Major Depressive Disorder காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விபத்தில் அந்த வாகனமோட்டிக்கு வலது கை முறிவு மற்றும் உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக குவாலா திரெங்கானு மாவட்ட காவல் துறை தலைவர், Asisten Komisioner Azli Mohd Noor கூறியுள்ளார்.

மேலும், அந்த நபர் ஓட்டிய Honda Jazz வாகனம் அவரது தம்பிக்குச் சொந்தமானது என்றும், சமூக ஊடகங்களில் பரவியதுபோல அது திருடப்பட்ட வாகனம் அல்ல என்றும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் விபத்துக்கு முன், அவர் Sultan Ismail Nasiruddin Shah விளையாட்டு மைதான வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த Honda City காரில் சட்டவிரோதமாக நுழைந்து, 200 ரிங்கிட் ரொக்கம் உட்பட சில பொருட்களைத் திருடியதையும் போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

இதற்குப் பின்னர், அவர் மீண்டும் Honda Jazz வாகனத்தில் ஏறி அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது, Jalan Kemajuan பகுதியில் அவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் ஊகங்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!