
பாரிஸ், அக்டோபர் -8,
பிரான்சின் தலைநகரான பாரிசில், நகைச்சுவை என்ற பெயரில், பலரை காலியான ஊசியால் குத்திய சமூக வலைத்தள பிரபலம் (influencer) ஒருவர், தற்போது ஆறு மாத சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
27 வயதான ‘அமீன் மொஜிடோ’ (Amine Mojito) தனது அச்செயலைக் குறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றார்.
அந்த காணொளியில் அவர், பாரிசின் தெருக்களில் இருப்பவர்களை காலியான ஊசியால் குத்துவதை ‘விளையாட்டாக’ செய்கிறார் என்பதைப் போன்று காட்டியுள்ளார்.
யாரையும் காயப்படுத்தும் நோக்கத்திற்காக தாம் இதை செய்யவில்லை என்றும், ஸ்பெயின் மற்றும் போர்த்துகளில் மற்றவர்கள் செய்த ‘பிராங்க்’ வீடியோக்களை பின்பற்றிதான் தாம் இதைச் செய்ததாக, கடும் விமர்சனங்களுக்கு பிறகு மொஜிடோ விளக்கம் அளித்தார்.
இச்சம்பவத்தால் சிலர் உண்மையிலேயே பயந்துபோயும் மன அழுத்தத்திற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், மேலும் சிலர் தமக்கு வைரஸ் தொற்றியிருப்பதாக எண்ணி மனநிலை மதிப்பீடு மேற்கொண்டனர் என்றும் வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் நீதிபதி இந்தச் செயல் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால் இந்த வழக்கு தொடரப்படுகின்றதென்று அறிவித்தார்.
சமூக வலைத்தள பயனர்கள் பலரும் அவரது செயலை கடுமையாக விமர்சித்து, இத்தகைய ‘பிராங்க்கள்’ வன்முறைச் செயல்களை ஊக்குவிக்கும் என்றும் கருத்துரைத்து வருகின்றனர்.