Latestமலேசியா

வீடுகளைப் பழுதுப் பார்க்கவும் புதிய வீடுகளைக் கட்டவும் 1.02 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்ட மடானி அரசு

புத்ராஜெயா, டிசம்பர்-7,பழைய வீடுகளைப் பழுதுப் பார்க்கவும், புதிய வீடுகளைக் கட்டித் தரவும் மடானி அரசாங்கம் இந்த ஈராண்டுகளில் மட்டும் 1.02 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டுள்ளது.

அக்காலக்கட்டத்தில் 34,470 வீடுகள் பழுதுப் பார்க்கப்பட்டன அல்லது புதிதாகக் கட்டப்பட்டதாக, KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) தெரிவித்தார்.

அவற்றில் KPKT மட்டுமே 104.4 மில்லியன் ரிங்கிட் செலவில் 4,814 வீடுகளைப் பழுதுப் பார்த்து, 245 புதிய வீடுகளைக் கட்டித் தந்துள்ளது.

ஏனையவை புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சால் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் குறிப்பாக ஏழை மற்றும் பரம ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மடானி அரசாங்கத்தின் தொடர் கடப்பாட்டை இது புலப்படுத்துவதாக அறிக்கை வாயிலாக ஙா கோர் மிங் கூறினார்.

இவ்வேளையில், PLANMalaysia திட்டத்தின் வாயிலாக கிராம மக்களை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான செயல்களில் KPKT இறங்கியுள்ளது.

Sistem Ciri-Ciri Spatial Desa Malaysia அல்லது S-CHARMs என சுருக்கமாக அழைக்கப்படும் கணினி தரவு முறையின் உருவாக்கமும் அதிலடங்கும்.

கிராமங்களுக்கான வசதிக் கட்டமைப்புத் திட்டங்களை முறைப்படி வரைய ஏதுவாக, இந்த S-CHARMs முறையில் எல்லைகள் உள்பட கிராமங்களின் விவரங்கள் சேமித்து வைக்கப்படுமென்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!