வெனிசுவலா அதிபர் மதுரோ & அவரது மனைவியை உடனடியாக விடுவிக்க அமெரிக்காவிடம் அன்வார் வலியுறுத்தல்

புத்ராஜெயா, ஜனவரி-5,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வெனிசுவலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை உடனடியாக விடுவிக்க அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, கராகஸில் நடந்த இராணுவ நடவடிக்கையில் மடுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்தது.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட ஏதுவாக இருவரும் நியூ யோக் கொண்டுச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அன்வார், இது அனைத்துலக சட்டத்திற்கும், ஒரு சுயாட்சி நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானது என அன்வார் கண்டித்தார்.
வெளிநாட்டு தலையீட்டால் நடக்கும் ஒரு நாட்டின் தலைமைத்துவ மாற்றம் ஆபத்தான முன்னுதாரணம் என்றும் அவர் எச்சரித்தார்.
எதுவாக இருந்தாலும் வெனிசுவலாவின் அரசியல் எதிர்காலம் அதன் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான தீர்வுகள் மட்டுமே மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் நிலைத்தன்மையையும் உறுதிச் செய்யும் என்றும் புத்ராஜெயாவில் வெளிள்ளிட்ட அறிக்கையில் பிரதமர் கூறினார்.
வெனிசுவலாவுக்குள் இராணுவத்தை அனுப்பி அதன் அதிபரையே சிறைபிடித்துச் சென்றுள்ள அமெரிக்காவின் செயல், ‘உலகக் கட்டப் பஞ்சாயத்துகாரர்’ என தன்னைத் தானே நினைத்துக் கொள்ளும் அந்நாட்டின் கர்வத்தை மீண்டும் பறைசாற்றுவதாக உலகளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.



